மாணவர்கள் பட்டங்களை தாண்டி சமூக அறிவையும் பெறவேண்டியது அவசியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0 2172

வேலை கிடைக்கவில்லை என இளைஞர்களும், தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என நிறுவனங்களும் கூறாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவிலும், சிந்தனையிலும் மேன்மை பெற்றவர்களாக உயர வேண்டும் என்பது தமது ஆசை என குறிப்பிட்டார்.

மேலும், பட்டங்களை தாண்டி சமூக அறிவையும் மாணவர்கள் பெறவேண்டியது அவசியம் என அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments