பிரார்த்தனை நிகழ்ச்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்...17 பேர் படுகாயம் - நிகழ்ச்சி ரத்து!

0 4499

மத்திய பிரதேச மாநிலம் சாகரில், பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசிலில் சிக்கி 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

பினா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரார்த்தனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு தேங்காய் பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏறத்தாழ 25 ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்த நிலையில், பிரசாதம் பெற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களை பின்னால் இருந்தவர்கள் மிதித்ததில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments