மனைவி, மகன் கண் முன்பே ஊராட்சிமன்றத் தலைவர் வெட்டிக் கொலை.. தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்..!

0 7514
மனைவி, மகன் கண் முன்பே ஊராட்சிமன்றத் தலைவர் வெட்டிக் கொலை.. தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி, மகன்கள் கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மனைவி, குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று காரின் மீது வேகமாக  மோதியதில் நிலைகுலைந்த கார், பின் பக்கமாக பள்ளத்தில் இறங்கி விட, லாரியில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்டோர்  மனோகரனை மனைவி  மற்றும் குழந்தைகள் கண்முன்னே சராமரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து மனோகரன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments