சென்னையில் கடன் தருவதாகக் கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மோசடி.!

0 9112

சென்னை அடுத்த அம்பத்தூரில், கடன் தருவதாக கூறி புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவன், instant loan app மூலம் கடன் வேண்டுமா என அவரிடம் கேட்டுள்ளான்.

30 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என அப்பெண் தெரிவிக்கவே, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளான்.

தொடர்ந்து, அப்பெண்ணை தொடர்பு கொண்டு கடன் தொகை தயாராகி விட்டதாகவும், முன்னதாக  3 ஆயிரம் ரூபாய் முன் பணமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளான்.

இதற்கு அப்பெண் மறுக்கவே, அவரது புகைப்படத்தினை தவறாக சித்தரித்து அவரின் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனால், மன உலைச்சலில் இருந்த அவர் அதிக அளவிலான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments