330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் உள்பட 11 பேர் பலி - 34 பேர் படுகாயம்..!

0 3080
330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. குழந்தைகள் உள்பட 11 பேர் பலி - 34 பேர் படுகாயம்..!

தென் அமெரிக்க நாடான பெருவில் 330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்ட விபத்தில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் லிமா நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 330 அடி செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தாக்கில் பலமுறை பேருந்து உருண்டு உருக்குலைந்தது.

சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அருகிலிருந்த மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments