இந்தியா அனுப்பி வைத்த எரிபொருள் கொழும்பு வந்தடைந்ததாக இந்திய துணை தூதரகம் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்த சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் அங்கு சென்றடைந்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்த சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் அங்கு சென்றடைந்தது.
இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், Torm Helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட எரிபொருள் கொழும்பு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்தது. நடப்பாண்டில் பயிர் செய்வதற்கு ஏதுவாக யூரியாவை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு, இலங்கை தூதரக அதிகாரி நன்றி தெரிவித்தார்.
Comments