மணப்பாறையில் பால்குடம் எடுத்துச் சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட வீடியோ வைரல்

0 10100

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பால்குடம் ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு விலகி நின்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வருவதைக் கண்டு பக்தர்கள் அனைவரும் சாலையில் இருபுறங்களிலும் விலகி நிற்க, ஆம்புலன்ஸ் தடையின்றி சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments