தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி - இந்திய ஆடவர் அணி சாம்பியன்.. மத்திய அரசு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தோனேஷியாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தோனேஷியாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயாசென்னும், 2-வது போட்டியில் சாத்விக் - சிராக் இணையும், 3-வது போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தும் அடுத்தடுத்து வெற்றி பெற்றனர்.
73 ஆண்டு கால தாமஸ் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாதனை படைத்த இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Comments