ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சி - புடனோவ்

0 3675

ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முயற்சித்து வருவதாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர் புடனோவ்  தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் புடனோவ் ,மூன்றே மாதங்களில் உக்ரைன் ரஷ்யா போரில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்றார்.

போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால் புடின் பதவி இழக்க நேரிடும் எனத் தெரிவித்த அவர், புடினின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான பணிகளை ரஷ்ய ராணுவ அதிகாரிகள் சிலர் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

புற்றுநோய் உள்பட மேலும் சில நோய்களால் புடின் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைந்துள்ளதாகவும் புடனோவ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments