கள்ளக்குறிச்சியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற 11ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை

0 9702

கள்ளக்குறிச்சி அருகே, பிறந்தநாள் பார்ட்டிக்காக நண்பனால் அழைத்துச் செல்லப்பட்ட 11ம் வகுப்பு மாணவன், வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மகன் கோகுல், தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு 7 மணிக்கு கோகுலின் வீட்டுக்கு வந்த உடன் படிக்கும் மாணவன் ஒருவன், பிறந்தநாள் பார்ட்டி எனக்கூறி கோகுலை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் கோகுல் வீடு திரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலை திருக்கோவிலூர் அருகே கை மற்றும்  கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மாணவன் கோகுல் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக, கோகுலை அழைத்துச் சென்ற மாணவனை பிடித்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments