தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் மோசடி.. 3 பேர் கைது..!

தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் மோசடி.. 3 பேர் கைது..!
சென்னை அடுத்த அம்பத்தூரில் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், அண்ணா நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் அவனது நண்பர்கள், சுமார் 210 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.
வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை சோதனை செய்தபோது போலியானவை என தெரியவந்தது. 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த தமீம் அன்சாரி உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Comments