சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட மர்ம நபர்... 10 பேர் உயிரிழப்பு

0 2814

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபலோ நகரில் கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து இளைஞன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டே அந்த காட்சிகளை இளைஞன் ஹெல்மெட் கேமிரா மூலம் இணையத்தில் லைவில் ஒளிபரப்பும் செய்துள்ளான்.

நுழைவு வாயில் பகுதியில் ஆயுதங்கள் ஏந்திய அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்த போது, தான் வைத்திருந்த துப்பாக்கியை கழுத்துப்பகுதியில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே அந்த இளைஞன் சுட முயன்றுள்ளான். அப்போது அவனை சமாதானம் செய்து துப்பாக்கியை கீழே போட வைத்து போலீசார் கைது செய்தனர்.

நிறவெறி காரணமாக துப்பாக்கிச்சூட்டை அரங்கேற்றிய அந்த கொடூரனுக்கு, உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments