அவசரமாக பாலத்தில் தரையிறங்கிய விமானம் காருடன் மோதி கோர விபத்து

0 3381

அமெரிக்கா மியாமி நகரில் என்ஜின் கோளாறால் பாலத்தில் அவசரமாக தரையிறங்கிய இலகு ரக விமானமும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்காயம் அடைந்தனர்.

3 பயணிகளுடன் பறந்த இலகு ரக விமானத்தின் என்ஜின் திடீரென பழுதான நிலையில் அவசரமாக ஹாலோவர் பாலத்தில் தரையிறக்கப்பட்டது. எதிர் திசையில் வந்த காரும் விமானமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானத்தில் தீ பற்றியது.

இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். மற்ற இரு பயணிகள், காரில் வந்த குழந்தைகள் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். 

Awful private plane crash in #mia @nbc6 pic.twitter.com/LjJg7bgUtM

— Alex H (@lexSayzzz) May 14, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments