சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி உடல் நசுங்கி பலி ... ஆத்திரத்தில் வாகனத்திற்கு தீ வைத்து ஓட்டுநரை கொன்ற பொதுமக்கள்

மத்திய பிரதேசத்தில், சாலைவிபத்தில் சிறுமி உயிரிழப்புக்கு காரணமான சரக்கு வாகனத்தை பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தியதில் அதன் ஓட்டுநரும் பலியானார்.
அலிராஜ்பூர் மாவட்டத்தின் Barjhar crossing பகுதியில் அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம், சிறுமி மீது மோதியதில் 6 வயது சிறுமி ஒருவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சரக்கு வாகனத்தை சிறைபிடித்து அடித்து நொறுக்கி தீயிட்டனர்.
தப்ப முயன்ற ஓட்டுநரையும் அவர்கள் தீயில் தள்ளி விட்டனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments