இந்தியாவில் போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது - மத்திய அரசு

0 1859
இந்தியாவில் போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளது - மத்திய அரசு

இந்தியாவில் போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பு இருப்பதாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஜி 7 நாடுகள் முன்வைத்த விமர்சனத்துக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோடைகாலம் தொடங்கியபோது இந்தியா கோதுமை உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவைகளை கருதி ஏற்றுமதிகளுக்குத் தடை விதித்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் முறைப்படுத்தப்படாத ஏற்றுமதியால் விலை உயர்வைத் தவிர்க்கவே ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜி 7 மாநாடு இங்கிலாந்து நாட்டின் கார்னவால் பகுதியில் நடைபெற்றது.அப்போது, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடை பிரச்சனையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் முடிவு குறித்து, இதில் பங்கேற்ற ஜெர்மனியின் வேளாண்துறை அமைச்சர் Cem Ozdemir அதிருப்தி தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜி 7 மாநாடு ஜெர்மனியில் கூடும் போது இப்பிரச்சினை விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜி 20 நாடுகளின் உறுப்பினர் என்ற முறையில் இந்தியா பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று ஜெர்மனி அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு போதுமான அளவு கோதுமை கையிருப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டின் தேவைகளுடன் அண்டை நாடுகளின் தேவைகளையும் ஆப்கான் போன்ற பாதிக்கப்பட்ட நாடுகளின் தேவைகளையும் இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments