இலங்கை அகதிகள் முகாமில் குளியலறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது

இலங்கை அகதிகள் முகாமில் குளியலறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, யூடியூப் பார்த்து தானியங்கி கேமராவை தயாரித்த இளைஞர் அதனை குளியலறையில் பொருத்தி பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்ற போது போலீசில் சிக்கினார்.
இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே இருந்த குளியலறைக்கு சென்ற போது, அறையின் உள்ளே மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான கேமரா இருப்பதை கவனித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
போலீசார் விசாரித்ததில் அதே குடியிருப்பில் வசிக்கும் விஜயகுமார் என்பவன் கேமராவை பொருத்தியது தெரியவந்தது. யூடியூபை பார்த்து தானியங்கி வெப் கேமராவை தயாரித்ததாகவும் பவர் பேங்க் மூலம் கேமராவை இயங்கச் செய்து, மெமரி கார்டில் காட்சிகள் பதிவாகும் வகையில் தயார் செய்ததாகவும் போலீசாரிடம் விஜயகுமார் ஒப்புக் கொண்டான்.
Comments