ஒன்றிய கவுன்சிலர் மிரட்டியதால், ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை

0 2972
ஒன்றிய கவுன்சிலர் மிரட்டியதால், ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே, ஒன்றிய கவுன்சிலர் மிரட்டியதால், ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாயனி குப்பம் ஊராட்சி செயலாளரான ராஜசேகர், தனது சகோதரருக்கு வேலை வாங்கி தருமாறு இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி அணைக்கட்டு ஒன்றிய திமுக கவுன்சிலர் ஹரியிடம் கொடுத்துள்ளார்.

பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால் ராஜசேகர் பணத்தை திருப்பிக் கேட்ட போது, பணத்தை கொடுத்த மறுத்த ஹரி, பதவியில் இருந்து நீக்கிவிடுவேன் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

ராஜசேகர் எழுதியதாக கூறப்படும் 3 பக்க கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ஒன்றிய கவுன்சிலர் ஹரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments