ரூ.1,100 கோடிக்கு விற்பனையான பென்ஸ் கார்... விண்டேஜ் கார் படைத்த சாதனை

'மெர்சிடிஸ்-பென்ஸ் 300 எஸ்.எல்.ஆர்' ரக கார், ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்று, உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கார் என்ற சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தெரிவித்த ஹேகர்டி என்ற இணையதளம், பொக்கிஷமாக கருதப்படும் அந்த பந்தய கார், பென்ஸ் காப்புரிமை பெற்ற முதல் மோட்டார் கார் என குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் மாடல்களில் ஒன்றான 'மெர்சிடிஸ்-பென்ஸ் 300 எஸ்.எல்.ஆர்' ரக கார்கள், 1950களில் இரண்டு மட்டுமே உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முன்னிலையில் ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தில், வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி, பல்வேறு தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.
Comments