பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

0 172

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த உமையூரான் பிள்ளை, தனது பழைய ஓட்டு வீட்டுக்கு அருகே புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தார்.

இந்நிலையில், பழைய வீட்டிற்குள் உமையூரான் பிள்ளை குடும்பத்துடன் படுத்திருந்தார். அப்போது, பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் உமையூரான் பிள்ளையும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகன அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உமையூரான் பிள்ளையின் மனைவி சந்திரிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீட்டில் படுத்திருந்த இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments