டெல்லியில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்... எச்சரிக்கும் வானிலை ஆய்வுத் துறை

0 2077

டெல்லியில் கடந்த இரு நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியசைத் தொடும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

டெல்லியில் வெள்ளியன்று பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 42 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனக் கணிக்கப்பட்டது. இந்நிலையில் நஜப்கரில் 46 டிகிரி செல்சியசும், ஜாபர்பூர் மங்கேஸ்பூரில் 45 டிகிரி செல்சியசும், சப்தர்ஜங்கில் 44 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.

இன்று நகரின் பல பகுதிகளில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனக் கூறி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments