கொள்ளை அடிக்க சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் போதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சபலத் திருடன்

0 5483

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் கஞ்சா போதையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த சபலத் திருடன் கைது செய்யப்பட்டான்.

கோவூரில் தாய், அக்காவுடன் வசித்து வந்த இளம் பெண்ணின் அறைக்குள் நள்ளிரவில் சென்ற மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கஞ்சா போதையில் இருந்தவன் என்ற ஒரு தகவலை வைத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை அந்த பெண்ணிடம் காட்டி சதீஷ் என்பவனை கைது செய்தனர். விசாரணையில் நகை,பணம் இல்லாததால் அந்த பெண்ணை சதீஷ் போதையில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments