பிளாக்மெயில் காதலன்.. பீஸ்ட்டான பிரியராலு டேட்டிங் அழைத்து சம்பவம்.. இந்த காதல் பயங்கரமானது.!

0 7583

காதலித்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டிய காதலனை டேட்டிங் அழைத்து சென்று,  முகநூல் காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் தொடர்பாக கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத் , அமீர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஸ்வேதா. ஸ்வேதாவுக்கு பெங்களூரில் உள்ள சாப்ட்வெர் என்ஜினீயருடன் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் சுவேதாவுக்கு புகைப்படக் கலைஞரான அஸ்மகுமார் என்பவர் நண்பராக அறிமுகமாகி உள்ளார்.

கடந்த 24 ந்தேதி தனது கணவருக்குத் தெரியாமல் காதலர் அஸ்மகுமாருடன் சுவேதா டேட்டிங் சென்றுள்ளார். அங்கு வைத்து மர்ம நபர் ஒருவர் சுத்தியால் தாக்கியதில் அஸ்மகுமார் பலத்த காயம் அடைந்தார்.

அஸ்மகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6ஆம் தேதி அஸ்மகுமார் பலியானார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர் அஸ்மகுமாருடன் சென்ற திருமணமான பெண்ணான ஸ்வேதாவை விசாரித்தனர்.

அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்தபோது, அவர் தனது முகநூல் காதலனுடன் சேர்ந்து இந்த கொடூரக் கொலையை செய்தது அம்பலமானது.

சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவை செல்போனில் தொடர்புகொண்ட அஸ்மகுமார், ஆடையின்றி 'வீடியோ கால்'-ல் வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

காதலனின் விபரீத ஆசையைத் தவிர்க்க இயலாத ஸ்வேதாவும், காதலன் விருப்பப்படி வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதனை தனக்கு சாதகாமாக்கிக் கொண்ட அஸ்மகுமார், கடந்த ஒரு மாத காலமாக சுவேதாவை செல்போனில் அழைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தான் தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறிய சுவேதாவிடம், காதலர்கள் இரண்டு பேரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோகால் வீடியோக்கள் ஆகியவற்றைக் காண்பித்து, நண்பர்கள், உறவினர்கள், கணவன் ஆகியோருக்கு அனுப்பி விடுவேன் என்று கூறி சுவேதாவை மிரட்டி வந்துள்ளான் அஸ்மகுமார்.

ஒரு கட்டத்தில் அஸ்மகுமாரின் தொல்லை தாங்காமல் அவனைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட ஸ்வேதா, அதற்கு தனது முகநூல் காதலன் அசோக்கிடம் பேசி கொலைக்கு 'ஸ்கெட்ச்' போட்டுள்ளார்.

அதன்படி கடந்த 24 ந்தேதி, பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு அஸ்மகுமாரை டேட்டிங் அழைத்துச் சென்ற ஸ்வேதா, தனது திட்டப்படி அங்கு முன்னதாகவே காத்திருந்த முகநூல் காதலன் அசோக்குடன் சேர்ந்து சுத்தியால் நான்குமுறை தலையில் தாக்கி கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவத்துக்கு அசோக்கின் நண்பர் கார்த்திக் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து 4 மாத கர்ப்பிணியான ஸ்வேதா, அசோக் , கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கணவன் நல்ல நிலையில் இருக்கும் போதே கண்ணில் பட்டவனை எல்லாம் காதலனாக்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments