திமுக பிரமுகர் கொலை.. துண்டு துண்டாக்கி தலையை கூவத்தில் வீசிய கொலையாளி.. திருமணம் கடந்த உறவால் விபரீதம்.!

0 9373
திமுக பிரமுகர் கொலை.. துண்டு துண்டாக்கி தலையை கூவத்தில் வீசிய கொலையாளி.. திருமணம் கடந்த உறவால் விபரீதம்.!

சென்னை ராயபுரத்தில் மாயமான திமுக பிரமுகரை வீட்டுக்குள் வைத்து துண்டு துண்டாக வெட்டி , குளியலறையில் மறைத்து வைத்திருந்த நிலையில், தலையை எடுத்துச்சென்று கூவத்தில் வீசிய திகில் சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை மணலி செல்வ வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி இவர் திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரநிதியாக உள்ளார். பைனான்ஸ் தொழில் செய்து வந்த இவர் கடந்த 10-ம் தேதி முதல் மாயமானதாக அவரது மகன் நாகேந்திரன் மணலி போலீசில் புகார் அளித்தார்

மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சக்கரபாணியின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் ராயபுரம் கிரேஸ் கார்டன் 3 வது சந்து பகுதியில் சக்ரபாணியின் இருசக்கர வாகனம் இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்

சக்கரபாணியின் செல்போன் அந்த பகுதியில் உள்ள தமிம் பானு என்பவரது வீட்டில் இருப்பதை டவர் லொகேஷன் மூலம் போலீசார் கண்டறிந்து அங்கு சென்றுள்ளனர்.

போலீசார் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து உள்ளே வருவோம் என்று போலீசார் எச்சரித்தவுடன் தமிழ் பானு வீட்டை கதவை திறந்து திறந்து உள்ளார் . இதனை எடுத்து வீட்டிற்குள் சென்று போலீசார் சோதனை செய்த போது வீட்டின்குளியலறையில் தலையில்லாமல்,துண்டு துண்டாக வெட்டி கவரில் போட்டு வைத்திருந்த மனித உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது மாயமான சக்கரபாணியின் சடலம் என்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிணக் கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் இருந்த தமிம் பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது கொலைக்கான திகில் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் தமிம்பானு என்பவருடன் சக்கரபாணிக்கு தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்து தமிம் பானுவின் கணவன் வீட்டை மாற்றி வேறு தெருவில் வீடு பார்த்து குடியேறி உள்ளார்.

கடந்த 10 ந்தேதி கணவன் ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் தமிம்பானு, சக்கரபாணியுடன் நெருக்கமாக இருந்துள்ளார், அப்போது வீட்டிற்குள் நுழைந்த தமீம்பானுவின் சகோதரர் வாசிம் பாஷா சக்கரபாணியை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே இந்த விவகாரத்தால் குடும்பத்தில் பிரச்சனை உருவான நிலையில் மீண்டும் வீடு தேடி வந்தது ஏன் எனக்கேட்டு அடிக்க பாய்ந்துள்ளார், அவரை சக்கரபாணி கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வாஷிம் பாஷா, அங்கு கிடந்த அரிவாள் மணையை எடுத்து சக்கரபாணியை வெட்டி உள்ளார். இதில் கழுத்தில் வெட்டு விழுந்த நிலையில் சக்கரபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

ஆத்திரத்தில் தாக்கியது கொலையில் முடிந்து விட்டதே என்று அஞ்சிய வாஷிம்பாஷாவுக்கு , அவரது சகோதரி தமீம்பானு ஆறுதல் கூறி சடலத்தை மறைக்க உதவி செய்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டி விட்டு குளியலறையில் வைத்து துண்டு சக்கரபாணியின் சடலத்தை துண்டாக துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.

சம்பவத்துக்கு மறு நாள் தலையை துண்டாக வெட்டி கவரில் போட்டு எடுத்துச்சென்று கூவம் ஆற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கூவத்தில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments