கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது. தொடக்க நாளான நேற்று உரை நிகழ்த்திய சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட சோனியா, இதற்கு செயல்முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments