கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது - பிரதமர்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உறவினர்கள் தலையீடு, கொள்கை முடக்கம், மோசடி உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற தொடக்க நிலை நிறுவனங்களுக்கான கொள்கை மாநாட்டில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
2014ஆம் ஆண்டு, நாட்டில் 300 முதல் 400 தொடக்க நிலை நிறுவனங்களே இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க நிலை நிறுவனங்கள் 70 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உறவினர்கள் தலையீடு, கொள்கை முடக்கம், மோசடி உள்ளிட்டவைகளால் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியதாக மோடி கூறினார்.
இளைஞர்களின் கண்டுபிடிப்பு வலிமைகளில் நம்பிக்கையை மீட்டெடுத்து, தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கி கொடுத்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்கு திட்டம், புதுமை, மற்றும் தொழில் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தியதாகவும், முதலில் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து இணக்கங்களை குறைத்து புதுமையான மனநிலையை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்தியதாக மோடி கூறினார்.
மெட்ரோ நகரங்களை தவிர்த்து நாட்டின் சிறிய நகரங்களிலும் தொடக்க நிலை நிறுவனங்கள் உள்ளதாகவும், குறிப்பாக 50 சதவீத நிறுவங்கள் சிறிய நகரங்கில் இயங்கி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒவ்வொரு வாரம் ஒரு புதிய தொடக்க நிலை நிறுவனம் நாட்டில் உருவாக்கப்படுவதாக கூறினார்.
நாட்டில் உள்ள தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக மாறி வருவதாகவும், ஜி 20 நாடுகளின் பொருளாதாராத்தில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
Comments