கர்நாடகாவில் பாஜக எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்ற திருவிழா மேடையில் திடீரென சரிந்து விழுந்த மின் விளக்குக் கம்பம்.!

0 3385

கர்நாடகாவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்ற விழா மேடை மீது பிரம்மாண்ட மின் விளக்குக் கம்பம் சரிந்து விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெலகாவி மாவட்டம் ராஜபுரா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் மேடை அமைக்கப்பட்டு, பாஜக எம்.பி.இரன்னா கடாடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர்.

மேற்கூரை இல்லாத மேடையின் முன்பக்கம் பிரம்மாண்ட அளவில் இரும்பு கம்பங்கள் நடப்பட்டு, அவற்றில் அதிக ஒளி வீசும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. விழா நடைபெற்ற பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்றில் மின் விளக்குக் கம்பங்களில் ஒன்று திடீரென மேடை மீது சரிந்தது.

இந்த விபத்தில் எம்.பி இரன்னா கடாடி உட்பட அனைவருமே நூலிழையில் உயிர் தப்பினர். ஒரு சிலர் லேசான காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments