நிலவில் விவசாயம் செய்ய அமெரிக்கா திட்டம்? நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரம் வளர்ப்பு..!

0 2967
நிலவில் விவசாயம் செய்ய அமெரிக்கா திட்டம்? நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரம் வளர்ப்பு..!

நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிப்பிட்ட தாவர இனம் ஒன்றை வளர்த்துள்ளனர்.

Thale Cress எனும் காலிஃபிளவர் மற்றும் புரொக்கோலி இனத்தை சார்ந்த தாவரத்தை 12 கிராம் எடை கொண்ட நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் வைத்து,நீர்,ஒளி மற்றும் ஊட்டச்சத்து கொடுத்து வளர்த்ததாக புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மண் 1969 முதல் 1972 வரை முன்னெடுக்கப்பட்ட அப்போலோ நிலவு திட்டத்தில் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண் என தெரிவித்த விஞ்ஞானிகள், நிலவில் உணவு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ வழிவகை செய்யும் முயற்சிக்கு இந்த தாவர வளர்ப்பு ஒரு அடித்தளமாக அமைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments