தூங்கிகொண்டிருந்த வளர்ப்பு நாய்க்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை

0 2392

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே தூங்கிகொண்டிருந்த வளர்ப்பு நாய்க்குட்டியை சிறுத்தை ஒன்று கவ்வி, தூக்கி சென்ற காட்சி சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

ஹோச கொப்பல் என்ற கிராமத்தில் தேவகவுடா என்பவர் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்றிரவு அவரது வீட்டு வளாகத்திற்குள் குதித்த சிறுத்தை ஒன்று, தூங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை கவ்விக்கொண்டு, தப்பியோடியது.

அப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால், அதை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments