ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

0 2690

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 127 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சத்தியவேடு, நெலவாய் கிராமம், ஜங்கமலை உள்ளிட்ட வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் செம்மர கடத்திலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனம், 3 கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments