குடிபோதையில் கணவன் தகராறு... மகனுடன் சேர்ந்து கொளுத்திய மனைவி... தீக்குளித்ததாக நாடகம்!

0 2583

சீர்காழி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சக்திவேல் என்பவர் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடிபோதையில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேல், அறை கதவை பூட்டிக்கொண்டு  தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக மனைவியும், மகனும் அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.

சக்திவேலின் மரணத்தில் கிராம நிர்வாக அலுவலகர் சந்தேகம் எழுப்பியதால், எரியூட்டும் தருவாயில் போலீசார் உடலை கைப்பற்றினர்.

விசாரணையில், குடிபோதையில் தகராறு செய்த சக்திவேலை மனைவி வசந்தா சுத்தியலால் தலையில் அடித்து கொன்று விட்டு, மகனுடன் சேர்ந்து உடலை எரித்து விட்டு, தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments