8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஒரே வகுப்பைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் கைது..!

0 3639

சென்னை காசிமேட்டில் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே வகுப்பை சேர்ந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காசிமேடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியின் வீட்டுக்கு 4 மாணவர்களும் படிப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்துக்கொண்ட மாணவர்கள், மாணவியின் கைகளை கட்டி, வாயில் துணியை அடைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு அதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி சென்றதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து மாணவி தன் தாயாரிடம் சொன்ன நிலையில் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என அஞ்சிய பெற்றோர் இதே நிலை மற்ற மாணவிகளுக்கு ஏற்படக்கூடாது என எண்ணி வாய்மொழியாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து 4 மாணவர்களையும் பிடித்து விசாரித்த போது சமூக வலைத்தளங்களில வரும் வீடியோக்களை பார்த்து இது போன்று செய்ததகாக மாணவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், எல்லா வகையான புகார்களை தெரிவிக்க வசதியாக 14417 என்ற தமிழக அரசின் அவரச அழைப்பு எண் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments