மரத்தை வெட்டி விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய காவலர்.!

0 5121

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களது நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி விற்பனை செய்ய டிராக்டரில் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சாத்தனூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளும் தாங்கள் கையில் இருந்த பணத்தை காவலரிடம் கொடுத்த நிலையில், இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments