ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு

0 3146
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாளை முதல் 15ஆம் தேதி வரை ஆம்பூரில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரியாணி திருவிழா நடைபெறவிருந்தது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியாக நடத்தப்படவிருந்த நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரியாணி திருவிழா தொடர்பாக விளக்கமளிக்க ஆட்சியருக்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments