"மரியுப்போல் உருக்காலையில் இருந்து வெளியேற உதவுங்கள்"-எலான் மஸ்கிற்கு உக்ரைன் ராணுவத் தளபதி கோரிக்கை

0 2698

மரியுப்போல் உருக்காலையில் சிக்கியுள்ள உக்ரைன் தளபதி ஒருவர் தங்களை காப்பாற்றுமாறு உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அசோவ்ஸ்டல் உருக்காலையில் உள்ள பதுங்கு குழிகளில் கை, கால்களை இழந்த நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள உக்ரைனிய தளபதி ஒருவர், அங்கிருந்து ஏதேனும் ஒரு நட்பு நாட்டிற்கு வெளியேற உதவுமாறு எலான் மஸ்கிற்கு டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

சாத்தியமற்றதை கூட சாத்தியப்படுத்த முடியும் என மக்களுக்கு கற்பித்து வரும் நீங்கள், உயிர்வாழத் தகுதியற்ற அந்த உருக்காலையில் இருந்து தங்களை மீட்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments