ஜூன் 10ல் மாநிலங்களவை தேர்தல்..!

0 2126
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி இடங்களுக்கு வரும் ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி இடங்களுக்கு வரும் ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் தலா 6 பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களில், திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, கர்நாடகாவிலும் மாநிலங்களவை எம்பி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது பாஜகவுக்கு 101 எம்பிக்கள் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments