ஒரே நாளில் சட்டென்று சரிந்த கிரிப்டோகரன்சிகள்...பீதியில் முதலீட்டாளர்கள்..!

0 3544

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு ஒரே நாளில் 27500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 14 சதவீதம் அளவுக்கு இறங்கியது. 10க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளன.

யுஎஸ்டி காயினின் மதிப்பு ஒரு மாதத்தில் 97 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்து, ஒரு டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார மந்த நிலை போன்ற அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சிகளை விற்று விட்டு வெளியேற முயற்சிப்பதால் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments