பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை!

0 2113

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கி இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், சம்பந்தபட்ட அதிகாரி மீது முதலமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் மணிகண்டனிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தவணைத் தொகைகளை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன், நடந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோ வெளியான நிலையில், மேற்பார்வையாளர் மகேஷ்வரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments