மீன்பிடிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழப்பு.!

0 2594

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மீன்பிடிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் இரு மகள்கள் 9 வயதான ஷன்சிகா மற்றும் 8 வயதான சுஜி , கோடை விடுமுறையையொட்டி, நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது, இருவரும் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்த போதும் இரண்டு சிறுமிகளும் சேறு சகதியில் சிக்கியதால் நீரில் மூழ்கிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இரண்டு சிறுமிகளையும் சடலமாக மீட்டனர்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என காவல்துறையினர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments