பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு.. மலையில் உருண்ட பைக்கர்.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது..!

0 4112

வீக் எண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஆப் ரோடு பைக் சாகசத்தில் ஈடுபட்ட புல்லட் பைக்கர் ஒருவர் மலையில் இருந்து உருண்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது...

பஞ்சாப்பை சேர்ந்த புல்லட் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து வீக் எண்டை கொண்டாட அங்குள்ள கரடுமுரடான மலை பகுதியில் ஆப் ரோடு சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் நிறைந்த சாலையில் படகு போல பாய்ச்சலில் புல்லட்டை ஓட்டிச்சென்ற பைக்கர், மண் நிறைந்த காட்டுபாதையில் திக்கி திணறி, முக்கி முனங்கி கடைசியாக இலக்கிற்கு வந்து சேர்ந்தார்

இதனை தொடர்ந்து சரிவான மலை குன்று ஒன்றின் மீது புல்லட் வீரர்கள் ஒவ்வொருவராக தங்களது புல்லட்டை இயக்கி திறமை காட்ட தொடங்கினர். அப்போது ஒரு பைக்கரின் புல்லட் நடுவில் நின்று போனது

அந்த இளம் பைக்கர் தனது புல்லட்டை மேல் நோக்கி இயக்க முயல , அவரை பின்னோக்கி இழுத்துச்சென்றது புல்லட் . இதனால் அவர் மலையில் இருந்து புல்லட்டுடன் உருண்டார்

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் புல்லட்டோட பேஸ்மெண்டு தான் வீக்கு, நம்ம பாடி எப்பவுமே ஸ்ட்ராங்கு என்பது போல தனது புல்லட்டை சரி செய்து மலை குன்றின் மீது உற்சாகமாக புல்லடுடன் ஏறினார் அந்த பைக்கர்.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக விழுந்த இடத்தில் இருந்து பைக்கர் உடனே எழுந்தாலும் ஆப் ரோடு பைக் சாகசங்களின் போது எச்சரிக்கையுடனும், பாதுகாப்பு உடைகளை அணிந்தும் வாகனங்களை இயக்க தவறினால் விபரீதங்கள் அழையா விருந்தாளியாக வந்து விடும் என்று இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments