நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி.. பெண் கீழே விழுந்து காயம்..!
நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி.. பெண் கீழே விழுந்து காயம்..!
கரூரில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
ராமானுஜம் நகரில் இன்று காலை 6 மணியளவில் 3 பெண்கள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அப்பெண் தரையில் விழுந்து காயமடைந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து மர்மநபர்கள் தப்பியோடியதை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments