மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.80 லட்சம் மதிப்பிலான பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த விவசாயி..!

0 2230
மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.80 லட்சம் மதிப்பிலான பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த விவசாயி..!

நாகை மாவட்டம் வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக விவசாயி ஒருவர், தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார்.

வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்ற விவசாயிக்கு சொந்தமான இடத்தில், அவரது ஒப்புதலுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

அதற்கு அருகிலும் மருத்துவமனைக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயி வெங்கடேசன் தனது 37 சென்ட் நிலத்திற்கான பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் அருண்

தம்புராஜிடம் வழங்கியுள்ளார். 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வழங்கிய விவசாயி வெங்கடேஸ்வரனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments