50 ஆண்டுகளாக வசிக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மூதாட்டி புகார்.. உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர்..!

0 7591
50 ஆண்டுகளாக வசிக்கும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மூதாட்டி புகார்.. உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர்..!

மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்த மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

வில்லியநல்லூரைச் சேர்ந்த 75 வயதான கோவிந்தம்மாள், கணவனை இழந்த அவர் கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இவரது 2 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில், அவரது மகனும் இறந்து விட்டார்.

இதனால், தனியாக வசித்து வந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் சிலர் இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக புகார் அளித்தார். அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் லலிதா, மனுவினை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தவிட்டதன் பேரில் குத்தாலம் வட்டாட்சியர் கோமதி விசாரணை மேற்கொண்டார்.

மூதாட்டி வசிக்கும்; இடம் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு கிராமத்தில் யாரும் மூதாட்டி கோவிந்தம்மாளை தொந்தரவு செய்யவில்லை என்றும் வயதுமுதிர்வு மற்றும் பயம் காரணமாக தனது வீட்டை ஆக்ரமிக்க உள்ளதாக புகார் அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கோவிந்தம்மாளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவிந்தம்மாளை வரவழைத்து பட்டாவுக்கான ஆணையை வழங்கினார்.

வயது முதிர்வு காரணமாக தனது இடத்தை அக்கம்பக்கத்தினர் அபகரித்து விடுவார்கள் என பயத்தில் இருந்த அவரிடம் உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று மனோதிடமளித்து, தற்போது குடியிருந்து வரும் இடத்திற்கு அரசு பட்டா வழங்கியுள்ளதாகவும் பட்டாவுக்கான ஆணையை மூதாட்டி கோவிந்தமாளிடம் வழங்கினார்.

கோவிந்தம்மாளை வரவழைத்து பட்டாவுக்கான ஆணையை வழங்கினார். இதனால்,நெகிழ்ச்சியடைந்த மூதாட்டி கண்ணீர் மல்க தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments