உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை.. இரு நாடுகளின் போரால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்..!

0 1986
உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை.. இரு நாடுகளின் போரால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்..!

உக்ரைனில் இருந்து மேலும் மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளார் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர், கருங்கடலில் சரக்கு கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்து உலகளவில் உணவு தானியங்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

போரால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படத் துவங்கி உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான உடனடி சமாதான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் தற்போது காணப்படவில்லை என குட்ரெஸ் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments