ரஷ்ய தாக்குதலில் கை, கால்களை இழந்த அசோவ் படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு..!

0 9966
ரஷ்ய தாக்குதலில் கை, கால்களை இழந்த அசோவ் படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு..!

மரியுபோல் உருக்காலையில், கை, கால்களை இழந்த நிலையில் உள்ள வீரர்களின் புகைப்படங்களை உக்ரைனின் அசோவ் படையினர் வெளியிட்டுள்ளனர்.

தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவக் குழுவினரால் அமைக்கப்பட்ட அசோவ் படைப்பிரிவு, கடந்த 8 ஆண்டுகளாக டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் போராடி வந்தனர்.

மரியுபோல் உருக்காலையில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய நிலையில், அங்கு முகாமிட்டுள்ள அசோவ் படையினர் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. இதில் படுகாயமடைந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments