வங்கிக் கடன் நிலுவையை செலுத்தக் கேட்டு வந்த நபர்கள்.. கடன் பெற்றவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே கைகலப்பு..!
வங்கிக் கடன் நிலுவையை செலுத்தக் கேட்டு வந்த நபர்கள்.. கடன் பெற்றவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே கைகலப்பு..!
சென்னை தாம்பரம் அருகே வங்கியில் வாங்கிய கடன் நிலுவைத் தொகையை செலுத்தக் கேட்டு வந்த நபர்களுக்கும் கடன் வாங்கியவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் இருவேறு வங்கிகளில் கடன்கள் வாங்கி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், நேற்று மாலை 4 பேர் கொண்ட ஒரு குழு, கடன் நிலுவைத் தொகையை செலுத்தக் கேட்டு ஜெயபால் வீட்டுக்குச் சென்றுள்ளது.
வந்தவர்கள் எந்த வங்கி சார்பில் வந்திருக்கிறோம் என்று சொல்லாமலேயே நிலுவைத் தொகை குறித்து கேள்வி கேட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை ஒருமையில் பேசி ஜெயபால் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு கைகலப்பு உருவானது.
Comments