நெக்சான் இவி மேக்ஸ் என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது டாடா : ஒருமுறை சார்ஜ் செய்தால் 437 கி.மீ பயணிக்கலாம்

0 2910

மின்சார கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி மேக்ஸ் என்ற புதிய எஸ்யூவி ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 437 கிலோ மீட்டர் தூரம் வரை இதில் பயணிக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக டிசி சார்ஜிங் முறையில் 56 நிமிடங்களில் 80 சதவீத பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய இதன் ஆரம்ப விலை 17 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் எம்ஜி இசட்எஸ், கோனா எலக்ட்ரிக் போன்ற வாகனங்களுக்கு இது போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments