இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்து

0 6406

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அதிவேகத்தில் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

சென்னிமலை அடுத்த ஐயப்பா நகரை சேர்ந்த நல்லசாமி என்ற விவசாயி தனது தோட்டத்துக்கு செல்ல காங்கயம் சென்னிமலை சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். சாலையின் இடதுபுறமாக சென்றுக்கொண்டிருந்த அவர், வெப்பிலி பிரிவு அருகே சாலையின் மறுபக்கம் திரும்ப முயற்சி செய்த போது, அதிவேகத்தில் வந்த மினி சரக்கு லாரி அவர் மீது மோதியது. 

ஹெல்மெட் அணியாமல் வந்த நல்லசாமி சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments