ரஷ்யாவின் அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கிய உக்ரைன் படைகள் : வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியீடு

0 2079

கார்கிவ் நகரில் உக்ரைன் ராணுவ வீரர்களால் தாக்கப்பட்ட ரஷ்ய ராணுவ டாங்கி வெடித்து சிதறிய டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ராணுவ டாங்கியை உக்ரைன் வீரர்கள் ராக்கெட் வீசி தாக்கிய நிலையில், அது வெடித்து வானுயர கரும்புகை எழுந்தது.

ரஷ்யாவின் T-90M ரக அதிநவீன ராணுவ டாங்கியை தாக்கி அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்கிவ் நகரின் வடக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிராமங்களை மீட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments