தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற அண்ணன்

0 18417

தருமபுரியில் தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இரும்பு ராடால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னன் என்பவரின் சகோதரியிடம் மதுபோதையில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.  அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ராஜேசை பிடித்து வைத்து அந்த பெண்ணை சிகிச்சைக்காக தர்ம புரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து ஆத்திரத்துடன் வந்த சென்னன் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து ராஜேசின் தலையில் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சென்னனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments