கல்விக்கு முதுமை தடையல்ல! 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றார் 87 வயதான அரியானா முன்னாள் முதலமைச்சர்

0 2164

அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 87வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சண்டிகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியானா மாநில கல்வி அதிகாரிகள் அவரிடம் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். கடந்த 2017 ஆம் ஆண்டு தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் சவுதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம்  அரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12ம் வகுப்பு தேர்வையும் எழுதினார். ஆனால், 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்தாண்டு 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதிய அவர் நூற்றுக்கு 88 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments